search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்"

    • தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடை பெறுகிறது.
    • சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு மலையனூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்ட அள்ளி ஊராட்சி, மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆகும்.

    சுற்றியுள்ள ராமகொண்ட அள்ளி, புது நாகமரை, சோளப்பாடி உள்ளிட்ட 18 ஊருக்கு, தலைமை மாரியம்மனாக இந்த கோவில் உள்ளது. இந்நிலை–யில் பல்வேறு பிரச்சனை, வழக்கு உள்ளிட்ட காரணங்க–ளால், சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று பம்பை மேளதாளங்கள் முடங்க, வானவேடிக்கையுடன், காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் மலையனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, தீர்த்த குடங்களை ஊர்வல மாக எடுத்து வந்தனர். அழகா கவுண்டனூரில் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வு நடை பெற உள்ளது. இந்த யாக பூஜைகளை இருபதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, மலையனூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

    • கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் புனரமைக்கப்பட்ட மகாசக்தி விநாயகர், மகாசக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி கடந்த 4-ம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது,

    அதனை தொடர்ந்து புது விக்ரஹம் கரி கோல ஊர்வலம், ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம், உள்ளிட்ட யாகங்கள் வளர்க்கப்பட்டு அக்னி ஆராதனம் செய்யப்பட்டு, கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது. இதனையடுத்து நூதன விக்கிரஹம் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்று தலும், திருமஞ்ச னம்,அபிஷேகம்,பூர்ணா ஹதி, யாகசாலை ஹோமம்

    உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையிலிருந்து கும்பத்தை தலை மீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து விநாயகர் மற்றும் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாட்டை ஊர் பொது மக்கள் மற்றும் விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.

    • நத்தம் அருகே செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • அங்கு ராஜகோபுரம், மூலவர் கோபுர கலசங்களில் புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூரில் செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல்நாள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. பின்னர் கோவில்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பூஜைகள் முதல் 2 நாட்கள் நடந்தது.

    தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு ராஜகோபுரம், மூலவர் கோபுர கலசங்களில் புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

    கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் , முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரிகுமார், உலுப்பகுடி பால்பண்ணை தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நத்தம் மாரியம்மன் கோவிலில் காலை 11.30 மணிக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2007 -ம் ஆண்டிற்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தின் திருப்பணிகளை சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், மனைவி பிரேமா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்தனர்.

    இதையடுத்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 4ந் தேதி முதல் நேற்று 7-ந்தேதி காலை வரை பல கட்டமாக ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கோ பூஜை, மஹா பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11.30 மணிக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன்,

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, இந்து சமய அறநிலையத்துறை இணைக் கமிஷனர் பாரதி, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,

    அஞ்சுகுளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜா சீனிவாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×